பாசம் செல்லும் பாதை
அலை போன பின்னும்
தரை ஈரம் கொள்ளும்
மழை போன பின்னும்
இலை தண்ணீர் சிந்தும்
நடந்து செல்கையில்
தரை ஈரம் இழக்கலாம்
கடந்து சென்றால்
இலை நீரும் காயலாம்
எனினும்,
பாசத்தின் பயணம் நீளும்
சென்ற அலையும் திரும்பும்
நேசம் அன்பென மாறும்போது
கோடையும் மழையாய் பொழியும்
Wednesday, April 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
alai, mazhai, ilai...
ReplyDeletepaasam, nesam....
Arpudham